Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ளகிறார்

டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ளகிறார்

By: vaithegi Fri, 09 June 2023 09:35:44 AM

டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ளகிறார்

சென்னை: மேட்டூர் அணையிலிருந்து வருகிற 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணைக்கு ஜூன் 16-ம் தேதி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை தண்ணீரை எதிர்நோக்கி கல்லணை மட்டும் இன்றி அந்த தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் முமரமாக நடைபெற்று கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் வழித்தடங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தஞ்சை சென்றார். முதலமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

chief minister,delta districts,survey ,முதலமைச்சர் ,டெல்டா மாவட்டங்கள்,ஆய்வு

அதனையடுத்து சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்ற அவர் இன்று காலை தஞ்சையில் நடைபெற்று வரும் தூர்வாரப் பணிகளை பார்வையிடுகிறார்.அதன் பின் லால்குடி அருகே உள்ள பூழை ஆற்றில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்யும் அவர் திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று , பின்னர் சேலம் மாவட்டத்திற்கும் செல்கிறார்.

மேலும் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் நேரடியாக தண்ணீரை திறந்து வைக்கவுள்ளார். தஞ்சை முத்துவாரி வடிகால், விண்ணமங்கலம் வடிகால் பகுதிகளில் முதலமைச்சர் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

Tags :