Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை .. வலுக்கும் கோரிக்கை

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை .. வலுக்கும் கோரிக்கை

By: vaithegi Sun, 24 Sept 2023 6:01:23 PM

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை .. வலுக்கும் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் உரிமை தொகையாக வழங்கப்படுவதாக முதல்வர் தேர்தல் வாக்குறுதியை தெரிவித்து இருந்தார். திமுக அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகி உள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வந்தது.

இதற்கு முன்னதாக அனைத்து பெண்களுக்கும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முதல்வர் தகுதியுள்ள பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

request,head of household ,கோரிக்கை, குடும்பத் தலைவி

இந்த நிலையில் மொத்தம் விண்ணப்பித்திருந்த 1 கோடியே 60 லட்சம் பெண்களில் ஒரு கோடி 6,50,000 பெண்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை அளிக்கப்பட்டுவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 57 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவுள்ளது. உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று மீண்டும் மேல்முறையீடு செய்து கொண்டு வருகின்றனர்.

தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் விண்ணப்பித்தோரில் மூன்றில் 2 பங்கிருக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் அரிசி அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்

Tags :