Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் சிறையில் வாடும் 254 இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்

பாகிஸ்தான் சிறையில் வாடும் 254 இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்

By: Nagaraj Sun, 02 July 2023 11:30:44 PM

பாகிஸ்தான் சிறையில் வாடும் 254 இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்

புதுடெல்லி: பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 254 இந்திய மீனவர்கள் மற்றும் 3 இந்திய சிவில் கைதிகள் நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக் கொண்டது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றன. இதில் பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர்.

indian prisoner,jail,pakistan,request, ,இந்திய கைதி, கோரிக்கை, சிறை, பாகிஸ்தான்

சில சமயங்களில் கைதானவர்கள் விவரம் தெரியாமல் வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இதற்கு தீர்வாக, 2008ல், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், இரு நாடுகளும், ஆண்டுதோறும், ஜனவரி, 1 மற்றும் ஜூலை, 1ம் தேதிகளில், தங்கள் நாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள, அண்டை நாட்டு பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பட்டியலை பரிமாறிக் கொள்ள வேண்டும்.

அதன்படி இந்தியாவும் பாகிஸ்தானும் அந்தந்த நாடுகளில் உள்ள அண்டை நாடுகளின் கைதிகளின் பட்டியலை பரிமாறிக்கொண்டன. அப்போது, பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 254 இந்திய மீனவர்கள் மற்றும் 3 இந்திய சிவில் கைதிகள் நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக் கொண்டது.

பாகிஸ்தான் காவலில் உள்ள இந்தியர்கள் என நம்பப்படும் 12 மீனவர்கள் மற்றும் 14 சிவில் கைதிகளுக்கு உடனடியாக தூதரக அணுகலை வழங்குமாறு பாகிஸ்தான் கேட்டுக் கொள்ளப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|