Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறைச்சாலைகளில் உள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்க கோரிக்கை

சிறைச்சாலைகளில் உள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்க கோரிக்கை

By: Nagaraj Mon, 14 Sept 2020 08:34:30 AM

சிறைச்சாலைகளில் உள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்க கோரிக்கை

சிறைச்சாலைகளில் உள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் சிறைச்சாலைகளில் பரவி வருவதன் காரணமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களை விடுதலை செய்யவேண்டும் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது;

prison,journalist,officers,group insistence ,சிறைச்சாலை, பத்திரிகையாளர், அதிகாரிகள், குழு வலியுறுத்தல்

எகிப்தில் முகமட் மொனிர் என்ற பத்திரிகையாளர் விசாரணைக்கு முன்னதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு ஜூலை 13 ம் திகதி உயிரிழந்துள்ளார். எகிப்திய தலைநகரில் உள்ள மிக மோசமான சிறைச்சாலையில் அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் அந்த சிறைச்சாலையில் பல பத்திரிகையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

எகிப்தில் சிறைகளில் உள்ள பத்திரிகையாளர்களை பொறுத்தவரை கொரோனா வைரஸ் என்பது விசாரணைகளை எதிர்கொள்ளாமல் மரணதண்டiனையை எதிர்கொள்வதை போன்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஹொன்டுராஸில் பத்திரிகையாளர் டேவிட் ரொமேரோ எல்னர் என்பவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு சுவாசப்பாதிப்புகளால் உயிரிழந்தார்.

ஊழல் குறித்த செய்திகளுக்காக அவதூறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் பத்துவருடம் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தார். கிர்கிஸ்தானில் ஜூலை 25 ம் திகதி உடல்நிலை பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இரண்டு தசாப்தகாலமாக சிறையில் வாடிய பத்திரிகையாளர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டார் என உறவினர்கள் கருதுகின்றனர்.

பலவாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவும் வேகமும் குறைவடையவில்லை இந்த முக்கியமான தருணத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாதுகாப்பற்ற சூழலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|