Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை

கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை

By: vaithegi Thu, 25 May 2023 3:44:42 PM

கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் நிலவும் கோடை வெப்பத்தால் மக்கள் வெயிலில் தலைகாட்ட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.இதையடுத்து சில இடங்களில் அதிக வெப்பத்தால் பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி கொண்டு வருகிறது.

இந்த வெப்பம் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் வருகிற ஜூன் 1ம் தேதி பள்ளிகள் அறிவிக்கப்பட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

summer heat,schools ,கோடை வெயில்,பள்ளிகள்

ஆனால் இதற்கு மத்தியில் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.இதனை அடுத்து இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் விடுக்கும் கோரிக்கையில் வெயில் மக்களை வட்டி வதைத்து கொண்ட வருகிறது.

மேலும் அத்துடன் கொரோனா தொற்று பரவலும் வேகமெடுக்கிறது. அதனால் பள்ளிகள் திறப்பை 15 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Tags :