Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க கோரிக்கை

By: Monisha Tue, 17 Nov 2020 09:45:43 AM

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா பரவல் பெருமளவில் குறைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதங்களில் தினசரி 5,000 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மருத்துவ பரிசோதனை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 174 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவ பரிசோதனை முடிவுகளை வெளியிடவில்லை. 116 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

virudhunagar district,corona virus,infection,treatment,kills ,விருதுநகர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 15 ஆயிரத்து 363 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 16 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதில் சுகாதாரத் துறையினர் மெத்தனம் காட்டுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டோர் பட்டியலை தினசரி தவறாமல் வெளியிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :