Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரபிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700யை தாண்டியுள்ளது

உத்தரபிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700யை தாண்டியுள்ளது

By: vaithegi Mon, 30 Oct 2023 5:53:55 PM

உத்தரபிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700யை தாண்டியுள்ளது

உத்தரபிரதேசம் : இந்தியாவில் பல மாநிலங்களில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,700யை தாண்டி இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அதில் லக்னோவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு தொற்று பதிவாகி இருக்கிறது. மேலும் ஐஷ்பாக், அலிகஞ்ச், சந்திரா நகர், கோசைங்கஞ்ச், இந்திரா நகர், சின்ஹாட், ககோரி, என்கே சாலை, செஞ்சிலுவை சங்கம், சில்வர் ஜூபிலி மற்றும் துரியாகஞ்ச் ஆகிய பகுதிகளிலிருந்து டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

dengue,uttar pradesh,heavy rains ,டெங்கு ,உத்தரபிரதேசம் ,கனமழை


மேலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் அகர்வால் தெரிவித்து உள்ளார்.

எனவே டெங்குவில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் வைத்து கொள்ள வேண்டும் எனவும், தண்ணீர் நிரம்பிய தொட்டிகளை மூடி வைப்பதும், குளிரூட்டிகளை வாரம் 1 முறை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அரசு அறிவுறுத்தி கொண்டு வருகிறது.

Tags :
|