வியட்நாமில் அதிகளவில் பரவி வரும் டெங்கு
By: vaithegi Thu, 19 Oct 2023 3:56:48 PM
வியட்நாம் : தமிழகத்தில் கடந்த மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பாதிப்பானது உறுதி செய்யப்பட்டு வருகிறது.எனவே இதற்காக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது நோய் பரவலை கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது. இந்நிலையில் வியட்நாம் நாட்டில் நடப்பாண்டு தொடக்கம் முதல் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.
வியட்நாமின் தலைநகரான ஹனோயில் மட்டும் கிட்டத்தட்ட 20,000 மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த மாதம் வரையிலும் 3 ஆயிரம் பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. ஆனால் அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
இதையடுத்து வியட்நாமில் தற்போது வரை டெங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 639 ஆக உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு டெங்வக்சியா மற்றும் குடெங்கா என்ற 2 தடுப்பூசிகள் செலுத்தப்படும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் காரணமாக வியட்நாமில் தற்போது வரை 27 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனவே இதன் காரணமாக டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.