பேருவளை வைத்தியசாலை பல்வைத்தியருக்கு கொரோனா பாதிப்பு
By: Nagaraj Tue, 03 Nov 2020 5:50:12 PM
பல்வைத்தியருக்கு கொரோனா... பேருவளை வைத்தியசாலையின் பல் வைத்தியர் ஒருவர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே களுபோவில போதனா வைத்தியாசாலையில் பணியாற்றிய வைத்தியர் இருவருக்கும் தாதியரொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
களுபோவில போதனா வைத்தியாசாலையின் 15பி வோர்ட்டில் பணியாற்றிய வைத்தியர்
இருவருக்கும் தாதியரொருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரொருவருக்கும் கொரோனா
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின்
பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்திருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.