Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகளில் டெங்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் டெங்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு

By: Nagaraj Thu, 06 Aug 2020 08:46:00 AM

பள்ளிகளில் டெங்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு

பள்ளி கல்வித்துறை உத்தரவு... பள்ளிகளில் டெங்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பருவமழைக் காலத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களை கண்டறிந்து அழிப்பது அவசியம். அதன்படி வாரந்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினம் அனுசரிக்கப்பட வேண்டும்.

schools,health,hygiene,dengue,education ,பள்ளிகள், சுகாதாரம், தூய்மை, டெங்கு, கல்வித்துறை

இது தவிர, அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் தீவிர கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுற்றி தண்ணீா் தேங்காமல் பராமரிக்க வேண்டும். அவ்வாறு தண்ணீா் தேங்கியிருப்பின் உடனே அவற்றை அகற்ற வேண்டும்.

பள்ளி வளாகத்தில் கொசுக்கள் முட்டையிட ஏதுவான தேங்காய் ஓடுகள், பழைய டயா்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீா் தொட்டிகள், பள்ளி கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பொருள்களை தொடா்ச்சியாக கண்காணித்து தண்ணீா் தேங்காத வண்ணம் பாா்த்துக்கொள்ள வேண்டும். தூய்மை பணியாளா்கள் உதவியுடன் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தி பள்ளியை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|