Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் .. பள்ளிக்கல்வித்துறை

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் .. பள்ளிக்கல்வித்துறை

By: vaithegi Thu, 20 Apr 2023 3:17:44 PM

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ..  பள்ளிக்கல்வித்துறை


சென்னை:இலவச சேர்க்கை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ... கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகள், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் தங்களது பிள்ளைகளுக்கு இலவச சேர்க்கை பெற விரும்பும் பெற்றோர்கள் இன்று முதல் வரும் மே 18ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதையடுத்து இதில், விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2019 ஆகஸ்டு 1-ம் தேதியில் இருந்து 2020-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 2017 ஆகஸ்டு 1-ஆம் தேதியில் இருந்து 2018-ம் ஆண்டு ஜூலை 31- தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

school education department,free admission ,பள்ளிக்கல்வித்துறை ,இலவச சேர்க்கை


மேலும், தங்களுடைய பிள்ளைகளுக்கு இலவச சேர்க்கை பெற வரும் பெற்றோர்கள் விண்ணப்பதாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய அலுவலகங்களிலும் கட்டணமின்றி விண்ணப்பிக்கத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வருகிற மே 18-ம் தேதி வரை பெறப்படும் இவ்விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் பற்றிய விவரங்களும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் மே 21-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :