Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக பள்ளி மாணவர்களின் வருகை,விடுமுறை நாட்கள் பதிவு செய்ய புதிய திட்டம் ...பள்ளிக்கல்வித்துறை

தமிழக பள்ளி மாணவர்களின் வருகை,விடுமுறை நாட்கள் பதிவு செய்ய புதிய திட்டம் ...பள்ளிக்கல்வித்துறை

By: vaithegi Thu, 14 July 2022 7:25:19 PM

தமிழக பள்ளி மாணவர்களின் வருகை,விடுமுறை நாட்கள் பதிவு செய்ய புதிய திட்டம் ...பள்ளிக்கல்வித்துறை

தமிழகம் : தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 13 ஆம் தேதியில் இருந்தே மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்தாண்டில் முழு பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் அவ்வப்போது புதுவிதமான கட்டுப்பாடுகள் வந்து கொண்டு வருகிறது. அதாவது, மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயமாக மொபைல் போன் கொண்டு வர கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.அதையும் மீறி மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் பட்சத்தில் அந்த மொபைல் போன் பறிக்கப்பட்டு பள்ளி முடித்து செல்லும் போது கூட வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

school education department,attendance,holidays ,பள்ளிக்கல்வித்துறை, வருகை,விடுமுறை நாட்கள்

இதனையடுத்து ஒவ்வொரு மாணவனின் செயல்பாடுகளிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கெடுத்து பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களின் கல்வித்திறனை உயர்த்துவதற்கு ஆசிரியர்கள் தான் வழிவகை செய்துகொடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர் விடுப்பு எடுக்கும் போது முன்கூட்டியே ஆசிரியர்களிடம் அனுமதி வாங்கிவிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ஒரு மாணவன் தொடர்ச்சையாக 3 நாட்கள் விடுமுறை எடுக்கிறார் என்றால் கட்டாயமாக ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவனின் பள்ளி வருகையை பதிவு ஆப்பில் E-Profile என்னும் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆசிரியர்கள் கட்டாயமாக மாணவனின் விடுப்பு குறித்த விவரங்கள் மற்றும் விடுப்பு தேவை குறித்த விவரங்களையும் Individual Login பகுதியில் சென்று பதிவேற்றம் செய்யும்படி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :