Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆதார் அட்டையை, வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு

ஆதார் அட்டையை, வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு

By: vaithegi Sat, 10 Sept 2022 11:20:00 AM

ஆதார் அட்டையை, வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு

சென்னை: நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களாக ஆதார் அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதை அடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டை உடன் இணைக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. அதனபடி தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணி மட்டுமில்லாமல், தேர்தல் பணி ஆகிய பல்வேறு விதமான அரசு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

education department,aadhaar card,voter card ,பள்ளிக்கல்வித்துறை ,ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை

அந்த வகையில் தற்போது ஆதார் அட்டையை, வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மேலும் இது பற்றி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட உத்தரவில், ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் பணிகளுக்கு ஆசிரியர்கள் செல்லும் படி பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றனர். இந்த பணிகளை அனைத்து வேலை நாட்களிலும், பிற்பகல் 3 மணி முதல் கூடுதல் பணியாக ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :