Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் திறப்பு பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்

பள்ளிகள் திறப்பு பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்

By: vaithegi Wed, 07 June 2023 3:30:34 PM

பள்ளிகள் திறப்பு பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் நடப்பு ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே அதன்படி கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வருகிற ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

இதனை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மேற்கொள்ள வேண்டிய செயல் முறைகள் குறித்த அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

அதாவது பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு உடனடியாக அந்த வகுப்பிற்குரிய பாடங்களை நடத்தாமல் முதலில் மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும்.

department of education,schools ,பள்ளிக்கல்வித்துறை ,பள்ளிகள்

மேலும் கதை, பாடல்கள், விளையாட்டு ஆகியவற்றின் வாயிலாக அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

தொடக்கநிலை வகுப்புகளில் முதல் 2 வாரங்களுக்கு முந்தைய வகுப்பு பாடங்களை நினைவு கூர்ந்து கற்றலை எளிமையாக்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.

Tags :