Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

By: vaithegi Mon, 14 Nov 2022 7:21:54 PM

ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை கற்றல், கற்பித்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை பள்ளி மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது.

நடப்பு கல்வியாண்டு முதல் தொடக்க கல்வி மாணவர்களுக்கு எண்ணையும், எழுத்தையும் தெளிவாக கற்பிக்கும் வகையில் எண்ணும், எழுத்தும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் வரும் 2025 ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் அடிப்படை எழுத்து கணித அறிவை மேம்படுத்துவது.

school education department,teacher ,பள்ளிக்கல்வித்துறை ,ஆசிரியர்

அதை தொடர்ந்து வாசிப்பு பயிற்சி அளிக்கும் நோக்கில் ரீடிங் மாரத்தான் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் குழந்தைகளின் வாசிப்பு திறன் மேம்படும் என கல்வித்துறை தெரிவித்தது. தற்போது மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எனவே அதன் படி தொடக்க வகுப்புகளான 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வரும் 26-ஆம் தேதி குறு வள மையத்தில் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக சுமார் 442 முதன்மை கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த பயிற்சியினை சிறப்பாக நடத்த தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :