Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

By: vaithegi Sat, 07 Jan 2023 2:29:25 PM

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 2022- 2023ம் கல்வி ஆண்டுக்கான 10, 11 , 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு முழு பாடத்திட்டத்தின்படி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. மேலும் அத்துடன் பொதுத்தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை கடந்த நவம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.

இதையடுத்து இந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.இதை தொடர்ந்து, பிப்ரவரில் செய்முறைத்தேர்வுகள் பாட வாரியாக நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

department of school education,chennai ,பள்ளிக்கல்வித்துறை ,சென்னை

எனவே அதன்படி தமிழகம் முழுவதும் இருக்கும் 7600 பள்ளிகளில் பயின்று வரும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுத உள்ளனர். இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதாவது, தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் வருகிற 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் தங்களுக்கென மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அத்துடன் உயர் கல்விக்கு சேரும் மாணவர்களின் தகவல்களை பெறுவதற்காக இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :