Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட பணக்கையிருப்பு விகித கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும்

வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட பணக்கையிருப்பு விகித கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும்

By: Nagaraj Sat, 09 Sept 2023 10:00:16 AM

வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட பணக்கையிருப்பு விகித கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும்

புதுடில்லி: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்... ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறப்பட்டதால் வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட பணக் கையிருப்பு விகித கட்டுப்பாடுகள், படிப்படியாகத் தளா்த்தப்படும் என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது.

நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக இந்திய ரிசா்வ் வங்கி கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. அந்நோட்டுகளை வைத்துள்ளோா் அவற்றை வங்கிக் கணக்குகளில் செலுத்தலாம் என்றும், வங்கிகளில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அவ்வாறான சூழலில், வங்கிகளுக்கு அதிகப்படியான தொகை கையிருப்பாக வரும் என்பதால், வங்கிகளின் பணக் கையிருப்பு விகிதத்தை 10 சதவீதமாக உயா்த்தி ரிசா்வ் வங்கி கடந்த மாதம் 10-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

main reason,rbi,notification,notes,relaxation ,முக்கிய காரணம், ரிசர்வ் வங்கி, அறிவிப்பு, நோட்டுக்கள், தளர்வு

இந்நிலையில், ரிசா்வ் வங்கியின் ஆய்வுக் கூட்டம் மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், கூடுதல் பணக் கையிருப்பு விகித (ஐ-சிஆா்ஆா்) கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளா்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஐ-சிஆா்ஆா் தொகுப்பில் வைக்கப்பட்ட 25 சதவீதத் தொகையானது செப்டம்பா் 9-ஆம் தேதி சந்தையில் விடுவிக்கப்படும் என ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

மேலும் 25 சதவீதத் தொகையானது வரும் 23-ஆம் தேதி விடுவிக்கப்படும் என்றும், மீதியுள்ள தொகை முழுவதும் அக்டோபா் 7-ஆம் தேதி விடுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிக்கைக்காலம் நெருங்குவதால், பொருளாதாரத்தில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த மே 19-ஆம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 93 சதவீதமானது திரும்பப் பெறப்பட்டுள்ளதும் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|