Advertisement

ஐக்கிய முன்னணி கூட்டணியின் துணை வேட்பாளர் அறிவிப்பு

By: Nagaraj Sun, 17 July 2022 10:19:14 PM

ஐக்கிய முன்னணி கூட்டணியின் துணை வேட்பாளர் அறிவிப்பு

புதுடில்லி: ஐ.மு. கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு... ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னராக மார்கரெட் ஆல்வா ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் ஐ.மு.கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற முக்கிய எதிர்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மார்கரெட் ஆல்வாவின் பெயர் இறுதி செய்யப்பட்டது.

served,margaret alva,minister,vice president,candidate ,பணியாற்றியுள்ளார், மார்கரெட் ஆல்வா, அமைச்சர், துணை ஜனாதிபதி, வேட்பாளர்

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மார்கரெட் ஆல்வா, 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். கோவா, குஜராத், ராஜஸ்தான், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் இவர் கவர்னராக பணியாற்றியிருக்கிறார். அதற்கு முன்பாக, மத்திய அமைச்சராகவும் மார்கரெட் ஆல்வா இருந்திருக்கிறார்.


1974இல் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான அவர், அதன் பிறகு 1980, 1996, 1992 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இந்திரா அமைச்சரவையில் 1984-85வரை இவர் நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சராகவும் ராஜீவ் அமைச்சரவையில் மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சராகவும் மார்கரெட் ஆல்வா பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|