Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக வானதி சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

பாஜக வானதி சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

By: Nagaraj Wed, 28 Oct 2020 10:15:38 PM

பாஜக வானதி சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

வாழ்த்துக்கள் தெரிவித்த துணை முதல்வர்... பாஜக மகளிரணியின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசனுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக மகளிரணியின் தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அக்கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று மாலை (புதன்கிழமை) வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

vanathi srinivasan,deputy chief minister,twitter,greetings ,வானதி சீனிவாசன், துணை முதல்வர், டுவிட்டர், வாழ்த்து

இந்த நிலையில், வானதி சீனிவாசனுக்கு ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"பாஜக-வின் தேசிய மகளிர் அணி தலைவராக தமிழகத்திலிருந்து வானதி ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் பணி மென்மேலும் சிறந்தோங்கிட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்."

Tags :