Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு உயர் பதவிகொடுத்து தெலுங்கானா முதல்வர் அசத்தல்

வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு உயர் பதவிகொடுத்து தெலுங்கானா முதல்வர் அசத்தல்

By: Monisha Tue, 23 June 2020 10:36:39 AM

வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு உயர் பதவிகொடுத்து தெலுங்கானா முதல்வர் அசத்தல்

இந்திய-சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் திடீரென அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்கும் விதமாக இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு மத்திய மாநில அரசுகள் உதவி செய்து வருகிறது. மேலும், அவர்களுடைய குடும்பத்திற்கு அரசு பணி வழங்கவும் ஏற்பாடு செய்து வருகின்றன.

இந்த நிலையில் சீன ராணுவ மோதலில் உயிரிழந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு என்பவரின் மனைவிக்கு துணை கலெக்டர் பதவி கொடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.

telangana,chandrasekhara rao,deputy collector,heroic death ,வீரமரணம்,உயர் பதவி,தெலுங்கானா,சந்திரசேகர ராவ்,துணை கலெக்டர்

ஏற்கனவே கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்திற்கு ரூபாய் 5 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர்களது குடும்பத்திற்கு ஒரு வீட்டு மனை வழங்கப்படும் என்றும், அவரது மனைவிக்கு பணி வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தார்.

இதன்படி தற்போது முதல் கட்டமாக துணை கலெக்டராக சந்தோஷ் பாபுவின் மனைவியை நியமித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். தெலுங்கானா முதல்வரின் இந்த உத்தரவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags :