Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்பெயினின் வனத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க தீவிர முயற்சி

ஸ்பெயினின் வனத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க தீவிர முயற்சி

By: Nagaraj Sat, 20 May 2023 11:10:51 AM

ஸ்பெயினின் வனத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க தீவிர முயற்சி

ஸ்பெயின்: தீயை அணைக்க தீவிர முயற்சி... ஸ்பெயின் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வனத்தில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காட்டு தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வருகிறது.இதனால் தீயை அணைக்கும் பணி மிக கடினமாக இருப்பதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

helicopters,firefighting,effort,spain,air speed ,ஹெலிகாப்டர்கள், தீயணைப்பு, முயற்சி, ஸ்பெயின், காற்று வேகம்

தீவிபத்து ஏற்பட்டுள்ள பகுதியின் அருகில உள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டதாகவும், அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வனத்தில் ஏற்பட்டுள்ள காட்டு தீ வெகு வேகமாக பரவுவதால் ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags :
|
|