Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு

சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு

By: Nagaraj Sat, 12 Aug 2023 09:41:30 AM

சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு

கரூர்: மது பாட்டில்கள் அழிப்பு... சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 810 மது பாட்டில்களை கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பொக்லின் இயந்திரம் உதவியுடன் அழிக்கப்பட்டது.

திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்படும் உயர்தர வெளிநாடு மது பாட்டில்களை சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட இறக்குமதி மது பாட்டில்களை திருச்சி சுங்கத்துறையினால் லாரி மூலம் கரூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.

customs,officials,liquor bottles,destruction,corporation garbage ,சுங்கத்துறை, அதிகாரிகள், மதுபாட்டில்கள், அழிப்பு, மாநகராட்சி குப்பை

பின்னர் கரூர் அரசு காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் இரண்டு பொக்லின் இயந்திரங்கள் உதவியுடன் 6 அடி குழி தோண்டப்பட்டு அதில் 810 மது பாட்டில்களும் அழிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நகர் நல அலுவலர் இலட்சியவர்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதனை சுங்கத்துறை அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

Tags :