Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த விவரம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த விவரம்

By: vaithegi Thu, 22 Dec 2022 6:40:01 PM

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த விவரம்

சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கலை முன்னிட்டு அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு அனைத்து ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பை வழங்கியது.

இதையடுத்து இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.அதனை தொடர்ந்து வரவிருக்கும் 2023 ஆம் பொங்கல் பண்டிகைக்கு அரசு என்ன பரிசுத்தொகுப்பை வழங்கவுள்ளது என எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது.

pongal gift,ration card holders ,பொங்கல் பரிசு,ரேஷன் அட்டைதாரர்கள்

இதனை அடுத்து அவ்வபோது இது பற்றிய தகவல்களும் வெளி வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முதல்வர் தலைமையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

இதனையடுத்து வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை முதல்வர் மு. க ஸ்டாலின் 2023 ஜனவரி 2ம் தேதி சென்னையில் தொடங்கி வைப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :