Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல்கள் மெக்சிகோவில் கண்டெடுப்பு

துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல்கள் மெக்சிகோவில் கண்டெடுப்பு

By: Nagaraj Sat, 20 June 2020 11:23:28 AM

துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல்கள் மெக்சிகோவில் கண்டெடுப்பு

துண்டு துண்டாக வெட்டப்பட்ட மனித உடல்கள்... மெக்சிகோ நாட்டில் உள்ள குவாடலஜாரா பகுதியில் துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவாடலஜாராவுக்கு வெளியே உள்ள 4 பிராந்தியங்களில் கடந்த 10 நாட்களில் மட்டும் துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட மனித உடல்கள் 26 க்கும் அதிகமான பைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

smuggling gang,bodies,mexico,farm ,கடத்தல் கும்பல், உடல்கள், மெக்சிகோ, பண்ணை

3 ஆண்களின் சடலங்கள் ஒரு தகர சுரங்கத்திற்கு வெளியேயும், 9 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் எலும்புகள் ஒரு சிறிய பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 2 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அனைத்து உடல்களையும் அடையாளம் காண நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் கொலை நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|