Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி கோவில் செப்டம்பர் மாத கட்டண சேவை டிக்கெட்டுகளை இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி கோவில் செப்டம்பர் மாத கட்டண சேவை டிக்கெட்டுகளை இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு

By: vaithegi Tue, 28 June 2022 5:25:06 PM

திருப்பதி கோவில் செப்டம்பர் மாத கட்டண சேவை டிக்கெட்டுகளை இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்திலிருந்து மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

கடந்த மாதம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சில தரிசன சேவைகள் நிறுத்தப்பட்டன. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மீண்டும் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

paid service ticket,tirupati ,கட்டண சேவை டிக்கெட்டு,திருப்பதி

தற்போது அக்டோபர் மாதத்திற்கான கட்டண சேவைகளுக்கான டிக்கெட்கள் இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகளுக்கான டிக்கெட்களை இன்று மாலை 4 மணி முதல் வரும் ஜூன் 29 ஆம் தேதி வரைக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை போன்ற சேவைகளுக்கான டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யும் பக்தர்களை ஆன்லைன் மூலமாக தேர்வு செய்து குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு அவரவர் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் மட்டும் அந்த டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tags :