Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு

By: vaithegi Thu, 30 June 2022 7:02:26 PM

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து சிவசேனா கட்சி ஆட்சி நடத்தி வந்தது. இந்த ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனா கூட்டணிக்கு எதிராக கிட்டத்தட்ட 48 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி வெளியேற வேண்டும் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மகாராஷ்டிரா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அறிவித்திருந்தார்.

devendra patnavis,mlas ,தேவேந்திர பட்னாவிஸ் ,எம்எல்ஏக்கள்


அதன்படி, ஆளுநரின் உத்தரவை தொடர்ந்து பெரும்பான்மையை தாக்கரே இழந்ததன் காரணமாக நேற்று இரவு முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ளார். மேலும், இவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாகவே தனது அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்திருக்கிறார்.ராஜினாமா செய்த கையோடு நள்ளிரவில் சில கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிலையில் மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பாஜக கட்சியினரை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இன்று முதல்வராக பதவியேற்க உள்ளார். மேலும், உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்ததுமே பாஜக கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளனர்.

இதனையடுத்து, சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மகாராஷ்டிராவின் புதிய முதல்வருக்கான பதவியேற்பு விழா இன்று மாலை நடக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது..

Tags :