Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமர் கோவில் பூமி பூஜைக்கு பின் அயோத்தியில் குவிந்த பக்தர்கள்

ராமர் கோவில் பூமி பூஜைக்கு பின் அயோத்தியில் குவிந்த பக்தர்கள்

By: Karunakaran Fri, 07 Aug 2020 1:07:07 PM

ராமர் கோவில் பூமி பூஜைக்கு பின் அயோத்தியில் குவிந்த பக்தர்கள்

ராமர் கோவிலுக்கு நேற்று முன்தினம் பூமி பூஜை நடைபெற்றது. அதன்பின், அயோத்தியில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அங்குள்ள அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்தும், சரயு நதியில் நீராடியும் பக்தர்கள் குதூகலித்தனர். அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் நேற்று முன்தினம் நடந்தபோது, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அயோத்தியில் நேற்று குவிந்தனர். அங்குள்ள அனுமன்ஹார்கி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.சரயு நதிக்கரையில் பலர் செல்பி புகைப்படம் எடுத்தனர். பலர் சரயு நதியில் நீராடி மகிழ்ந்தனர். இந்த நாளுக்காகத்தான் மக்கள் நீண்டகாலமாக காத்திருந்ததாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

devotees,ayodhya,bhoomi puja,ram temple ,பக்தர்கள், அயோத்தி, பூமி பூஜை, ராம் கோயில்

அயோத்தியில் வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கடைகளை திறந்து வணிகம் செய்தனர். அனுமன் கோவிலை சுற்றி உள்ள பல்வேறு கடைக்காரர்கள், ராமர் கோவில் கட்டப்பட்டால் தங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் என்று கூறினர். அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வுகளை அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடினர். இதற்காக பல இடங்களில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கது என முஸ்லிம் ரா ஷ்ட்ரீய மஞ்ச் (எம்.ஆர்.எம்.) என்ற இஸ்லாமிய அமைப்பு வரவேற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரான எஸ்.கே.முத்தின், ராமர் கோவிலுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியபின் ஏற்பட்டுள்ள அமைதியும், நல்லெண்ணமும், ராமர் கோவிலுக்கு முஸ்லிம்கள் மவுன சம்மதம் வழங்கியிருப்பதையே காட்டுவதாக கூறினார்.

Tags :