Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை கோவிலில் நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி

திருவண்ணாமலை கோவிலில் நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி

By: Monisha Mon, 31 Aug 2020 3:38:33 PM

திருவண்ணாமலை கோவிலில் நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியதால் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் அனைத்து வழிப்படுத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை 1-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். கோவில் தினமும் காலையில் திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை திறந்திருக்கும். தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களுக்கு கோவிலுக்குள் செல்லஅனுமதி இல்லை.தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தினமும் 500 பக்தர்கள் அனுமதி அளிக்கப்படுகிறது.

thiruvannamalai,devotees,sami darshan,antiseptic,face mask ,திருவண்ணாமலை,பக்தர்கள்,சாமி தரிசனம்,கிருமி நாசினி,முகவசம்

பக்தர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கால்களை நீரில் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் கட்டாயம் முகவசம் அணிந்து வரவேண்டும். கோவில் வளாகத்திற்குள் கட்டாயம் 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும். சாமி சிலை மற்றும் கோவில் பகுதிகளை தொடக்கூடாது. தேங்காய், பழம், பூ கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். கோவில்களில் நடைபெறும் பூஜை அபிஷேகம் மற்றும் உற்சவத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

60 வயதுக்கு மேற்பட்டோர் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், சுவாசப் பிரச்சனை இருதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

Tags :