Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பின்வரிசையில் களம் இறங்கினாலும் அதகளம் செய்து சாதித்த தோனி

பின்வரிசையில் களம் இறங்கினாலும் அதகளம் செய்து சாதித்த தோனி

By: Nagaraj Sat, 15 Aug 2020 10:44:55 PM

பின்வரிசையில் களம் இறங்கினாலும் அதகளம் செய்து சாதித்த தோனி

இன்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார் தோனி. அவரை கூல் தன்மை அனைவரையும் விரும்பச் செய்கிறது.

அனைவரும் இவரைப் பார்த்து விரும்பவும் திகைக்கவும் செய்யக் காரணம் இவர் அணியை ஆட்டத்தின் இறுதி வரை வழிநடத்தி செல்லும் திறனே. ‌‌சில நேரங்களில் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்கள் விக்கெட்களை இழந்து அணி ஊசலாடும்போது தனி ஆளாய் களத்தில் நின்று வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்துள்ளார்.

இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அவற்றை விவரிக்க அவசியம் இல்லை. மேலும் தனது மின்னல் வேக ஸ்டம்பிங்குகள் மூலம் தனது முந்தைய சாதனையான 0.09 நொடிகள் என்னும் ஸ்டம்பிங் வேகத்தை 0.08 நொடிகளாகத் தானே முறியடித்து உள்ளார்.

கேப்டன் பணியைத் துறந்தபோதிலும் அவ்வப்போது களத்தில் கோலிக்கு சில அறிவுரைகளை வழங்குவார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். தோனி சில போட்டிகளில் இன்னிங்சின் இறுதிவரை அழைத்துச் சென்று ரன்களை குவித்து வெற்றிக்கண்டுள்ளார். இதுவே இவருக்கு ஒரு தனி சாதனையைத் தந்துள்ளது. 78 முறை நாட்அவுட் அடிப்படையில் தனிப்பெரும் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.

பின் வரிசை பேட்ஸ்மேன்களில் தனக்கு நிகர் எவரும் உலகில் இல்லையெனப் பல முறை நிரூபித்துள்ளார். வேறு எந்த பேட்ஸ்மேனும் இத்தகைய சாதனையை ஒருபோதும் செய்தது இல்லை.

Tags :
|