Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிரிக்கெட் உலகிலும், எங்கள் அணியிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனி-வெய்ன் பிராவோ

கிரிக்கெட் உலகிலும், எங்கள் அணியிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனி-வெய்ன் பிராவோ

By: Karunakaran Sun, 14 June 2020 12:21:42 PM

கிரிக்கெட் உலகிலும், எங்கள் அணியிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனி-வெய்ன் பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராக உள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உரையாடல் ஒன்றில் பேசிய வெய்ன் பிராவோ, டோனியை புகழ்ந்து கூறியுள்ளார். கிரிக்கெட் உலகிலும், எங்கள் அணியிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனி என்று புகழ்ந்துள்ளார்.

மேலும் அவர், மிக எளிதாக சந்தித்து பேசக்கூடிய வீரர்களில் அவரும் ஒருவர். கிரிக்கெட் களத்திற்கு வெளியே மிக இயல்பாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருப்பார். அவரது அறை கதவு எந்த நேரமும் திறந்தே இருக்கும். மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் பற்றி நீங்கள் எப்போது பேசினாலும் சரி. அவர்களில் டோனிதான் மிகவும் தன்னடக்கம் கொண்டவராக இருப்பார் என்று கூறினார்.

wayne bravo,dhoni,csk,cricket , டோனி,வெய்ன் பிராவோ,கிரிக்கெட்,சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பு வாய்ந்த ஒரு அணி எனவும், தங்களுக்கு தான் விசுவாசமான ரசிகர்கள் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்சின் வெற்றிக்குரிய எல்லா பெருமையும் கேப்டன் டோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரையே சாரும் எனவும், அணி நிர்வாகிகளும் டோனி, பிளமிங் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் கூறினார்.

டோனி, பிளமிங் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதால், முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது வெளிப்புற தலையீடு எதுவும் இருக்காது. இருவரும் கிரிக்கெட்டை பற்றி நன்கு அறிந்தவர்கள். அணி வீரர்களும் டோனி மீது மிகுந்த பாசம் வைத்து உள்ளனர். அந்த சூழலே அருமையானது என்று வெய்ன் பிராவோ டோனியை குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

Tags :
|
|