Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாலிவுட் நடிகர் அமீர் கான் பாகிஸ்தான் தீவிரவாதிகளை சந்தித்தாரா - உண்மை பின்னணி என்ன?

பாலிவுட் நடிகர் அமீர் கான் பாகிஸ்தான் தீவிரவாதிகளை சந்தித்தாரா - உண்மை பின்னணி என்ன?

By: Karunakaran Wed, 26 Aug 2020 12:19:54 PM

பாலிவுட் நடிகர் அமீர் கான் பாகிஸ்தான் தீவிரவாதிகளை சந்தித்தாரா - உண்மை பின்னணி என்ன?

பாலிவுட் நடிகரான அமீர் கான் சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவு, சுதந்திர தினம் போன்றவற்றுக்கு எந்த கருத்தையும் ட்விட்டரில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் தீவிரவாதிகளான தரிக் ஜமீல் மற்றும் ஜூனைத் ஷாம்ஷீட் ஆகியோருடன் நிற்கும் புகைப்படம் இது. எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்தபோது, அமீர் கானுடன் இருப்பது பாகிஸ்தான் பாடகர் ஜூனைத் ஜாம்ஷெட், பாகிஸ்தானை மத போதகர் தரீக் ஜமில் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். இதன் மூலம், அவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்ததாக வெளியான புகைப்படம்உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.

bollywood actor,aamir khan,pakistani extremists,social media ,பாலிவுட் நடிகர், அமீர்கான், பாகிஸ்தான் தீவிரவாதிகள், சமூக ஊடகங்கள்

உண்மையில் இது அமீர் கான் ஹஜ் சென்று பயணத்தில் இருவரையும் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். புகைப்படத்தில் இறுக்கும் ஜாம்ஷெட் பெயர் இணையத்தில் ஷாம்ஷெட் என தழுவி அவர் தீவிரவாதிகளை சந்தித்தார் எனும் தலைப்பில் வைரலாகி வருகிறது.

இதன் மூலம், அமீர் கானுடன் நிற்பவர்கள் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்தவர்கள் இல்லை என்பது உறுதியாகி விட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் போலி செய்திகளை பரப்பாதீர்கள்.

Tags :