Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுக்கு இப்படி வரவேற்பு கிடைத்ததா ?

வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுக்கு இப்படி வரவேற்பு கிடைத்ததா ?

By: Karunakaran Mon, 23 Nov 2020 2:25:20 PM

வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுக்கு இப்படி வரவேற்பு கிடைத்ததா ?

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசங்களுடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடனை ஏற்க டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தாமதம் காட்டி வருகிறார். எனினும், தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகை குழுவை அமைப்பதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கி படிப்படியாக முக்கிய அதிகாரிகளை நியமித்து வருகிறார்.

இந்நிலையில், இருவர் ஒன்றாக வேக மந்திரங்களை சொல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ வெள்ளை மாளிகையில் புதிய அதிபர் நுழையும் முன் மந்திரங்கள் சொல்லப்படுவதாக கூறி பகிரப்பட்டு வருகிறது.

joe biden,reception,white house,american president ,ஜோ பிடன், வரவேற்பு, வெள்ளை மாளிகை, அமெரிக்க ஜனாதிபதி

வெள்ளை மாளிகையில் புதிய அமெரிக்க அதிபர் நுழையும் முன் நாட்டு மக்களுக்கு நன்மை மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய வேத மந்திரங்கள் கூறப்படுகிறது எனும் தலைப்பில் பகரிப்பட்டு வருகிறது. இந்த வைரல் வீடியோவை ஆய்வு செய்தபோது, அது 2014 வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

இந்த வீடியோ மகாத்மா காந்தியின்145-வது பிறந்த நாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட அமெரிக்க இந்து கூட்டமைப்பின் நிகழ்வில் எடுக்கப்பட்டது ஆகும். அந்த வகையில், வைரல் வீடியோவுக்கும் ஜோ பைடன் வரவேற்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. மேலும் இது சமீபத்திய வீடியோ இல்லை என்பதும் தெளிவாகிவிட்டது. போலி செய்திகளை பரப்பாதீர்கள்.

Tags :