Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விளம்பரத்திற்காக கமல் கார் வாங்கி கொடுத்து உதவினாரா? சமூக வலைதளத்தில் விமர்சனங்கள்

விளம்பரத்திற்காக கமல் கார் வாங்கி கொடுத்து உதவினாரா? சமூக வலைதளத்தில் விமர்சனங்கள்

By: Nagaraj Wed, 28 June 2023 8:07:31 PM

விளம்பரத்திற்காக கமல் கார் வாங்கி கொடுத்து உதவினாரா? சமூக வலைதளத்தில் விமர்சனங்கள்

கோவை: விளம்பரத்திற்காக உதவினாரா? கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணியிலிருந்து விலகிய நிலையில் கமல் அவருக்கு கார் வழங்கி தொழில்முனைவோராக உதவியுள்ளார். விளம்பரத்திற்காக கமல் இவ்வாறு செய்தார் என ஒரு குரூப்பும், கமல் சத்தமின்றி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் என மற்றொரு குரூப்பும் சமூக வலைதளத்தில் மோதிக் கொண்டுள்ளன.

கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா சில மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். இளம் வயதில் பேருந்தை அவர் லாவகமாக இயக்கும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. அதிலிருந்து அவரை பல்வேறு இயக்கத்தினர், சங்கத்தினர், கட்சியினர் சந்தித்து வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கினர். இதன் மூலம் இரு தரப்புக்கும் பப்ளிசிட்டி கிடைத்தது.

சில நாட்களுக்கு முன் ஷர்மிளா இயக்கும் தனியார் பேருந்தில் கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி ஸ்ரீநிவாசன் பயனித்தார். தொடர்ந்து அவரது பேருந்தில் கனிமொழி எம்.பி.,யும் பயணித்து ஷர்மிளாவை வாழ்த்தினார். கனிமொழி பயணித்த போது பயிற்சி நடத்துநர் ஒருவர் அவரிடம் அதிகார தோரணையில் டிக்கெட் கேட்டதாக சர்ச்சையானது. இதனை விரும்பாத ஷர்மிளா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இப்பிரச்னையை எழுப்பிவிட்டு பணியிலிருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது.

பணியிழந்த பெண் ஓட்டுநருக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கமல்ஹாசன் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய காரை பரிசாக வழங்கி, “ஷர்மிளா ஒரு ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல; பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை. வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை அவர் மீண்டும் தொடர்வார்” என கூறினார்.

kamal,advertising,donation,not found,social networking ,கமல், விளம்பரம், நன்கொடை, கண்டுகொள்ளவில்லை, சமூக வலைதளம்

இந்தச் செயலுக்கு பலரும் விளம்பர நோக்கத்தோடு ஷர்மிளா செயல்பட்டார், அவருக்கு கார் தந்து கமலும் விளம்பரம் தேடிக் கொள்கிறார் என விமர்சிக்கத் துவங்கினர். குறிப்பாக வானதி ஸ்ரீநிவாசன், கோவை மக்களிடம் நன்மதிப்பைப் பெற கமல் இவ்வாறு செய்வதாக கூறியிருந்தார்.

ஆனால் இதனை கமல் ரசிகர்கள் மறுத்துள்ளனர். “மே மாதம் வட மாவட்டங்களில் பழங்குடியினர் மற்றும் தலித் குடியிருப்புகளில் உள்ள பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கிணறுகளை தூர் வாரி, சீர் செய்ய பணியாற்றும் ஒரு குழுவினருக்கு ரூ.5 லட்சம் நன்கொடை அளித்தார் கமல். ஆனால் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தான் இன்று ஷர்மிளாவுக்கு உதவியதை விளம்பரம் என்கின்றனர். கமலுக்கு எதற்கு விளம்பரம்.” என கூறியுள்ளனர்.

Tags :
|