Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பின் கமலா ஹாரிஸ் இறைச்சி உண்டாரா ?

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பின் கமலா ஹாரிஸ் இறைச்சி உண்டாரா ?

By: Karunakaran Thu, 12 Nov 2020 1:05:35 PM

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பின் கமலா ஹாரிஸ் இறைச்சி உண்டாரா ?

கடந்த 3ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் ஒருவழியாக வெளியானது. இதில் அந்நாட்டின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகி இருக்கிறார். மேலும், துணை அதிபராக இந்திய வம்சாவெளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாகி இருக்கிறார். அமெரிக்க முறைப்படி, ஜோ பைடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முறையாக அதிபராக பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு பின் கமலா ஹாரிஸ் மகிழ்ச்சியில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மாட்டு இறைச்சியை உண்டதால் இவர் பாதி பிராமினாகிவிட்டார், அதாவது இந்தியாவின் எதிரியாகிவிட்டார் என கூறும் தகவலுடன் பகிரப்பட்டு வருகிறது.

kamala harris,meat,us election,vice president ,கமலா ஹாரிஸ், இறைச்சி, அமெரிக்க தேர்தல், துணைத் தலைவர்

தற்போது இந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, இந்த வைரல் புகைப்படம் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. மேலும் புகைப்படத்தில் கமலா ஹாரிஸ் உண்பது பன்றி இறைச்சி என தெரியவந்துள்ளது. வைரல் புகைப்படத்திற்கு பலர் எதிர்ப்பும், பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, வைரல் புகைப்படத்தில் உள்ளது போன்று கமலா ஹாரிஸ் மாட்டு இறைச்சி சாப்பிடவில்லை என்பது உறுதியாகிவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படலாம். எனவே, போலி செய்திகளை பரப்பாதீர்கள்.

Tags :
|