Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹத்ராஸ் செல்லும் வழியில் பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி அப்படி செய்தார்களா ?

ஹத்ராஸ் செல்லும் வழியில் பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி அப்படி செய்தார்களா ?

By: Karunakaran Wed, 07 Oct 2020 8:03:05 PM

ஹத்ராஸ் செல்லும் வழியில் பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி அப்படி செய்தார்களா ?

சமீபத்தில் உத்தர பிரதேச மாநில ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனப்பெண் உயர்வகுப்பை சேர்ந்த 4 வாலிபர்களால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இது சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி ஹத்ராஸ் சென்றனர்.

இந்நிலையில், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில், ஹத்ராஸ் செல்லும் போது இருவரும் கிண்டல் செய்து பேசியதாக குறிப்பிடப்பட்டு வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படம் மற்றும் வீடியோக்களில் இருவரும் சகஜமாக சிரித்து பேசும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இவை இருவரும் ஹத்ராஸ் செல்லும் வழியில் எடுக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

priyanka,rahul gandhi,hadras,uttar pradesh ,பிரியங்கா, ராகுல் காந்தி, ஹத்ராஸ், உத்தரப்பிரதேசம்

இந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவை, ஏப்ரல் 27, 2019 அன்று எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இவை இருவரும் உத்திர பிரதேச மாநிலத்தின் கான்பூர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

கட்சி விவகாரம் தொடர்பாக கான்பூர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். அதன்படி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஹத்ராஸ் செல்லும் போது அப்படி நடந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகிவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படலாம். எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.

Tags :
|