Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷிய அதிபர் புதின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டாரா ?

ரஷிய அதிபர் புதின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டாரா ?

By: Karunakaran Tue, 21 July 2020 6:11:01 PM

ரஷிய அதிபர் புதின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டாரா ?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷியா கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக கூறியுள்ளது.

மேலும் விரைவில் இந்த கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யா தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு ஊடகங்களில் ரஷிய அதிபர் புதின் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கடந்த ஏப்ரல் மாதமே கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

russian president,putin,corona vaccine,corona virus ,ரஷ்ய ஜனாதிபதி, புதின், கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸ்

இதுதொடர்பாக ரஷ்யா அதிபர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேட்டி அளித்தபோது, புதின் போன்ற அரசியல் தலைவர்களுக்கு சோதனை தடுப்பூசி வழங்கப்பட்டதா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிமிட்ரி பெஸ்கோவ், இல்லை. இது ஒருபோதும் நடக்கவில்லை. கொரோனா தடுப்பூசி இன்னும் சான்றிதழ் பெறவில்லை என்று கூறினார்.

மேலும் அவர், கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனை மட்டத்திலேயே உள்ளது. தன்னார்வலர்கள் மட்டுமே தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதிபரோ அல்லது அவரது நிர்வாகத்தில் உள்ளவர்களோ தன்னார்வலர்களாக இருந்ததாக நான் கேள்விப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|