Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லண்டனில் இருந்தபடி டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்களா ?

லண்டனில் இருந்தபடி டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்களா ?

By: Karunakaran Tue, 15 Dec 2020 11:28:02 AM

லண்டனில் இருந்தபடி டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்களா ?

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளான் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பும் கூட்டத்தினர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் இருக்கும் கூட்டத்தினர் லண்டனில் இருந்தபடி டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தற்போது இந்த வைரல் வீடியோவை ஆய்வு செய்தபோது, அது 2019 ஆண்டு அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாகும்.

delhi peasants,support,struggle,london ,டெல்லி விவசாயிகள், ஆதரவு, போராட்டம், லண்டன்

இதே வீடியோ 2019 நவம்பர் மாதத்தில் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு இருக்கிறது. இதே வீடியோவை பாகிஸ்தானை சேர்ந்த செய்தி நிறுவனமும் பகிர்ந்து இருக்கிறது. அந்த வகையில் வைரல் வீடியோ சமீபத்திய டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

மேலும் இந்த வீடியோ ஒரு ஆண்டு பழைமையானது என தெரியவந்துள்ளது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. போலி செய்திகளை பரப்பாதீர்கள்.


Tags :