அமெரிக்காவில் பறந்தது போல் இந்தியாவிலும் பறந்ததா மர்ம பலூன்?
By: Nagaraj Sat, 25 Feb 2023 10:46:45 PM
புதுடெல்லி: அமெரிக்காவில் பறந்தது போல் இந்தியாவிலும் மர்ம பலூன் பறந்தது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வானத்தில் பறக்கும் மர்ம பொருட்கள் உலகம் முழுவதும் பாதுகாப்பை குறித்த விவாதத்தை கிளப்பி உள்ளது. அமெரிக்காவில் அடுத்தடுத்து பலூன் போன்று பறந்த மூன்று மர்ம பொருட்களை கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது பெரும் பரபரப்பானது. அது உளவு பலூனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதை போன்று வானில் பறக்கும் மர்மப் பொருள் குறித்து பல நாடுகளும் பல தகவல்களைக் கூறி வருகின்றன.
அவ்வகையில், அமெரிக்காவில் சுட்டு வீழ்த்திய பலூன் போன்ற மர்ம பொருள் இந்தியாவிலும் வானில் பறப்பது போன்று காணப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு, அந்தமான் நிகோபார் தீவுகளின் மேற்பகுதியில் பலூன் வகை பொருளை கண்டறிந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அது என்னவென்று அங்கே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
அப்போது அந்த பொருளின் நோக்கம் மற்றும் தோற்றம் தெளிவாக தெரியாததால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் கூறி உள்ளார்கள்.