Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அப்பாடா விடை கிடைச்சிடுச்சுய்யா... கிடைச்சிடுச்சு; கோழிதான் பர்ஸ்டாம், முட்டை நெக்ஸ்ட்டாம்

அப்பாடா விடை கிடைச்சிடுச்சுய்யா... கிடைச்சிடுச்சு; கோழிதான் பர்ஸ்டாம், முட்டை நெக்ஸ்ட்டாம்

By: Nagaraj Tue, 17 Jan 2023 11:41:41 AM

அப்பாடா விடை கிடைச்சிடுச்சுய்யா... கிடைச்சிடுச்சு; கோழிதான் பர்ஸ்டாம், முட்டை நெக்ஸ்ட்டாம்

நியூயார்க்: அப்பாடா விடை கிடைச்சிடுச்சுய்யா... முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா என்ற கேள்விக்கு தீர்வை எட்ட முடியவில்லை. இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் எனக்கு தெரியாது என்னும் வகையில் ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள்.

வேற்று கிரக மனிதர்கள், பிரபஞ்சம் எப்படி உருவானது, பேய் இருக்கா இல்லையா, இறந்த பின் நடப்பது என்ன என்பதை போல் விடை தெரியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்று எனலாம். ஆனால், பல காலங்களாக கேட்டு வரும் இந்த கேள்விக்கான பதிலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து வெளிநாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், பிரிட்டனின் ஷெஃபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் கோழி மற்றும் முட்டை பற்றிய இந்த கேள்வியை ஆழமாக ஆராய்ந்தனர்.

chicken,egg,scientists,answer,research,protein ,கோழி, முட்டை, விஞ்ஞானிகள், விடை, ஆராய்ச்சி, புரதம்

இந்த ஆய்வின் படி உலகில் முதலில் வந்தது முட்டை அல்ல கோழிதான். இந்த கேள்விக்கான காரணத்தை அவர்கள் கூறியுள்ளனர். விஞ்ஞானிகள் இது குறித்து கூறுகையில், ஓவோக்லிடின் என்ற புரதம் கோழி முட்டையின் ஓட்டில் காணப்படுகிறது. இந்த புரதம் இல்லாமல் முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாது.

இது மட்டுமின்றி, கோழியின் கருப்பையில் மட்டுமே இந்த புரதம் உற்பத்தியாகிறது என்றும், இந்த வகையில் கோழிதான் உலகிலேயே முதலில் வந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. Ovoclidin கோழியின் கருப்பையில் தயாரிக்கப்படும் ஒரு புரதம். பின்னர் இந்த புரதம் முட்டையின் ஓட்டை அடைகிறது.

விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு மற்றும் ஆராய்ச்சியில் உலகில் முட்டைக்கு முன் கோழி வந்தது என்று தெரிய வந்தது.

Tags :
|
|