Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் புதிய முயற்சியாக டிஜிட்டல் எல்.இ.டி. சிக்னல் தொடங்கப்பட்டது

சென்னையில் புதிய முயற்சியாக டிஜிட்டல் எல்.இ.டி. சிக்னல் தொடங்கப்பட்டது

By: Nagaraj Mon, 17 Aug 2020 09:42:01 AM

சென்னையில் புதிய முயற்சியாக டிஜிட்டல் எல்.இ.டி. சிக்னல் தொடங்கப்பட்டது

புதிய முயற்சி... சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில், காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள, டிஜிட்டல் எல்.இ.டி., சிக்னலை, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இயக்கி வைத்தார்.

சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில், காந்தி சிலை அருகே, எப்போதும் ஒளிரும் வகையிலான, டிஜிட்டல் எல்.இ.டி., சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.வா கன ஓட்டிகள், சிக்னலில் காத்திருக்க நேரிடும்போது, சிக்னல் முழுதும் சிவப்பு விளக்கும், கவனிக்க வேண்டிய நேரத்தில் மஞ்சள் விளக்கும் செல்ல வேண்டியபோது, பச்சை விளக்கும் ஒளிரும்.

இதனால், வாகன ஓட்டிகள், துாரத்தில் வரும்போதே, சிக்னல் இருப்பதை கவனிப்பர். விபத்து தடுப்பு நடவடிக்கையாக, சென்னையில் முதற்கட்டமாக இந்த டிஜிட்டல் எல்.இ.டி., சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அதை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இயக்கி வைத்தார். பின் இதுகுறித்து அவர் கூறியதாவது:

digital signal,crash,reduction,launched,patrols ,
டிஜிட்டல் சிக்னல், விபத்து, குறைப்பு, தொடங்கப்பட்டது, ரோந்துப்பணிகள்

குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தி, 24 மணி நேரமும் ஒளிரும், இந்த டிஜிட்டல், எல்.இ.டி., சிக்னல் இயக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள், விபத்து குறைப்பு அறிந்து, மற்ற இடங்களிலும், டிஜிட்டல் எல்.இ.டி., சிக்னல்கள் அமைக்கப்படும். அத்துடன், தற்போது, சென்னை முழுதும், விபத்து அதிகமாக நடக்கும் இடங்கள் அடையாளம் காணும் பணி, நடந்து வருகிறது.

அந்த இடங்களில் விபத்து பகுதி என, ஒளிரும் விளக்குகள் அமைக்க உள்ளோம். தளர்வுடன் கூடிய ஊரடங்கில், குற்றங்கள் அதிகரித்து விட்டது எனக் கருத முடியாது. மொபைல் போன் பறிப்பு போன்ற குற்றங்களை தடுக்க, ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குற்றங்கள் நிகழ்ந்துவிட்டால், அதில் ஈடுபட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர்.

பொதுமக்களுக்கு, இது குறித்து, சந்தேகம் இருந்தால், 044 - 2345 2330; 044 - 2345 2362 தொலைபேசி எண்களுக்கோ அல்லது 90031 30103 என்ற மொபைல் போன் எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|