Advertisement

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு

By: Nagaraj Fri, 22 July 2022 11:33:02 PM

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு

இலங்கை: புதிய பிரதமர் பதவியேற்பு... இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தன இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அங்கு பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச பதவி விலகியதையடுத்து, இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். இதன்பின்னர் நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றார்.

proximity,new prime minister,inauguration,president ranil,oath of office ,
நெருக்கம், புதிய பிரதமர், பதவியேற்பு, அதிபர் ரணில், பதவிப்பிரமாணம்

இதையடுத்து, இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்க வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த தினேஷ் குணவா்தன (73) இலங்கையின் பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அதிபர் ரணில் விக்ரமசிங்க அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.


தினேஷ் குணவா்தன, கோத்தபய ராஜபட்சவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :