Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க ஜி.வி.பிரகாசுக்கு உத்தரவு

ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க ஜி.வி.பிரகாசுக்கு உத்தரவு

By: Nagaraj Fri, 03 Feb 2023 11:07:04 PM

ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க ஜி.வி.பிரகாசுக்கு உத்தரவு

சென்னை: ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு 4 வாரத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் படைப்புகளுக்கு ரூ.6 கோடியே 79 லட்சம் சேவை வரி செலுத்த வேண்டும் என சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. 2019ம் ஆண்டு ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி 2020ல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “இசைப் படைப்புகளின் காப்புரிமை அந்தந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

எனவே, இந்த படைப்புகளின் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள். எனவே, என் மீது வரி விதிப்பது சட்டவிரோதமானது. என்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, அதை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில் ஜிஎஸ்டி கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனுவில், “வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரத்தின் அடிப்படையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ar raghuman,gv prakash kumar,music composer,music composers,service line, ,இசை படைப்பு, இசையமைப்பாளர்கள், ஏ.ஆர்.ரகுமான், சேவை வரி, ஜி.வி.பிரகாஷ்குமார்

அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் இல்லை. இந்த நோட்டீசை எதிர்த்து ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மேல்முறையீடு செய்து அவர் நிவாரணம் பெறலாம்.

எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் 1 கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி கமிஷனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அதனால், தள்ளுபடி செய்கிறேன். மேலும், ஜிஎஸ்டி கமிஷனரின் உத்தரவை எதிர்த்து 4 வாரங்களுக்குள் அவர் ஜிஎஸ்டி கவுன்சிலில் மேல்முறையீடு செய்யலாம்.

“விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்கிறேன். ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு 4 வாரத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

Tags :