Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கதை திருட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

கதை திருட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

By: Nagaraj Fri, 02 Oct 2020 2:50:58 PM

கதை திருட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

இயக்குனர் ஷங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு... கடந்த 10 வருடங்களாக இயக்குனர் ஷங்கரைத் துரத்தி வரும் எந்திரன் பட கதை திருட்டு வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. தன்மீதான கதை திருட்டு வழக்கை விசாரிக்க தடை விதிக்கக் கோரி இயக்குனர் ஷங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் அரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

வார இதழ் ஒன்றில் தான் எழுதிய ஜூகிபா என்ற தொடர் கதையை திருடியதாகவும், சினிமாவுக்கு ஏற்ற காட்சி அமைப்பு மற்றும் பாடல் காட்சிகளைச் சேர்த்து எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளார் என்றும் அதைவைத்து பல கோடி லாபம் சந்தித்த கலாநிதிமாறன் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என கேட்டு இருவருக்கும் எதிராக 2010 ஆம் ஆண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

writers,adangam,director shankar,appeal ,எழுத்தாளர்கள், ஆதங்கம், இயக்குனர் ஷங்கர், மேல்முறையீடு

அந்த வழக்கை தள்ளுபடி செய்யகோரி இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து , கதை திருட்டு வழக்கை விசாரிக்க தடை விதிக்க கோரி ஷங்கர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அப்போதும் எழுத்தாளர் அரூர் தமிழ்நாடன், ஷங்கர் தனது கதையை திருடியதாக எதிர் மனு தாக்கல் செய்தார். வருடங்கள் பல கடந்த நிலையில் கடந்த ஆண்டு ஷங்கருக்கு எதிரான கதை திருட்டு வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்த நிலையில், கதைத் திருட்டு வழக்கை விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி ஷங்கர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். துணிச்சலுடன் வருடக்கணக்கில் வழக்கு நடத்தும் எழுத்தாளர் அரூர் தமிழ்நாடனுக்கு எப்போது நியாயம் கிடைக்கும் என்பது சக எழுத்தாளர்களின் ஆதங்கமாக உள்ளது.

Tags :