Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாள நாட்டுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பேசி தீர்க்கப்படும் - ராஜ்நாத் சிங்

நேபாள நாட்டுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பேசி தீர்க்கப்படும் - ராஜ்நாத் சிங்

By: Karunakaran Tue, 16 June 2020 12:08:24 PM

நேபாள நாட்டுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பேசி தீர்க்கப்படும் - ராஜ்நாத் சிங்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லையையொட்டி லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா பகுதிகள் அமைந்துள்ளது. இதனை நேபாளம் தங்களுக்கு சொந்தமான பகுதி என கொண்டாடி வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்சுலாவையும் லிபுலேக் பகுதியையும் இணைக்கும் 80 கி.மீ. சாலையை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த சாலை நேபாள எல்லைக்குள் வருவதாக கூறி, நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தற்போது, லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் இணைத்து புதிய வரைபடத்தை தயாரித்துள்ளது. இந்த வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் நேபாள அரசியல் சாசன திருத்த மசோதா கடந்த சனிக்கிழமை நாடாளுமன்ற கீழ்சபையில் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்திய எல்லையில் சீனா தொல்லை கொடுத்து வரும்நிலையில், தற்போது நேபாளமும் எல்லையில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

nepal,india border,rajnath singh,uttarakhand,negotiated , ராஜ்நாத் சிங்,நேபாளம், உத்தரகாண்ட்,பேச்சுவார்த்தை

இந்நிலையில் உத்தரகாண்டில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசிய ராணுவ மந்தரி ராஜ்நாத் சிங், இந்தியா-நேபாளம் இடையேயான உறவை யாராலும் பிரிக்க முடியாது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பிரிக்க உலகத்தில் எந்த சக்தியும் இல்லை. தார்சுலா-லிபுலேக் சாலை அமைத்ததால் நேபாள மக்களுக்கு அதிருப்தி என்றால் அதற்கு தீர்வு காண முடியும். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று கூறினார்.

மேலும் அவர், உள்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் ஊக்கம் அளிக்கப்படும். முன்பு இந்தியா உலகில் 9-வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. பிரதமர் மோடி தலைமையிான தேசிய ஜனநாயக கூட்டணியின் 6 ஆண்டு கால ஆட்சியில் உலகின் 5-வது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|