Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்... இந்த மாதமும் சிலிண்டர் விலை குறையலை

எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்... இந்த மாதமும் சிலிண்டர் விலை குறையலை

By: Nagaraj Thu, 01 Dec 2022 6:31:56 PM

எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்... இந்த மாதமும் சிலிண்டர் விலை குறையலை

சென்னை: இந்த மாதமும் விலை குறையவில்லை... கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சீனாவில் கச்சா எண்ணெயின் தேவை குறைந்ததால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 டாலராகக் குறைந்தது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை சர்வதேச சந்தையின் ஒரு மாதத்திற்கான அடிப்படை சராசரியின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. எனவே சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை டிசம்பர் மாத தொடக்கத்தில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பரில், வணிக ரீதியிலான சமையல் சிலிண்டரின் விலை ரூ.115 குறைக்கப்பட்டது, ஆனால் கடந்த அக்டோபரில் இருந்து 14 கிலோ வீட்டு எல்பிஜி விலையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, டிசம்பரில் சிலிண்டர் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

price,expectations,not down,market,crude oil ,விலை, எதிர்பார்ப்பு, குறையவில்லை, சந்தை, கச்சா எண்ணெய்

இருப்பினும் இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் இணையதளங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்திற்கான 14 கிலோ சமையல் சிலிண்டர் மற்றும் 19 கிலோ வணிக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

கடந்த நவம்பர் மாதத்தின் விலையே இந்த மாதமும் உள்ளது. கமர்ஷியல் சிலிண்டர் விலை கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த மாதம் குறையவில்லை.

டெல்லியில் கடந்த மாதத்தை விட 14 கிலோ சிலிண்டரின் விலை ரூ.1,053 அதிகரித்துள்ளது. கொல்கத்தாவில் ரூ.1,079 ஆகவும், மும்பையில் ரூ.1,052 ஆகவும், சென்னையில் ரூ.1,068 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. 9 கிலோ கமர்ஷியல் சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1744, மும்பையில் ரூ.1696, சென்னையில் ரூ.1891, கொல்கத்தாவில் ரூ.1845.

கடந்த ஜனவரி மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை.

Tags :
|
|