Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 15 மாவட்டங்களில் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு

15 மாவட்டங்களில் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு

By: vaithegi Thu, 30 Nov 2023 3:47:45 PM

15 மாவட்டங்களில் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு

சென்னை: 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ... தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. எனவே இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து கொண்டு வருகிறது.

இதையடுத்து இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

disaster management department,rainy precautionary measures ,பேரிடர் மேலாண்மைத்துறை ,மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் சென்னை உட்பட 14 மாவட்ட ஆட்சியர்கள் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தி, வருவாய் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.மேலும் புயலை அடுத்து 14 கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். பழைய கட்டடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :