Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாகை மாவட்டத்தில் பேரிடர் கால மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி

நாகை மாவட்டத்தில் பேரிடர் கால மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி

By: Nagaraj Mon, 04 Sept 2023 09:27:08 AM

நாகை மாவட்டத்தில் பேரிடர் கால மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பேரிடர் கால மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

பேரிடர் கால மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நாகை அருகே தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தில் வெள்ள தடுப்பு தொடர்பான பேரிடர் கால மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் புயல், வெள்ளம், தீ, தொற்றுநோய் பரவுதல், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன.

rehearsal,performance,awareness,nagapattinam,public ,
ஒத்திகை, நிகழ்ச்சி, விழிப்புணர்வு, நாகப்பட்டினம், பொதுமக்கள்

அதனை தொடர்ந்து திருப்பூண்டி (கிழக்கு) கிராமத்தில் தொற்றுநோய் பரவுதல் தொடர்பான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியும், கீழ்வேளுர் வட்டம் பிரதாபராமபுரம் கிராமத்தில் கட்டிட இடிபாடு தொடர்பான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியும், வேதாரண்யம் வட்டம் நாலுவேதபதி கிராமத்தில் தீத்தடுப்பு தொடர்பான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியும், அகஸ்தியம்பள்ளி கிராமத்தில் புயல் தொடர்பான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாநில பேரிடர் மீட்புக்குழு, கடலோர பாதுகாப்பு குழுமம், வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும், ஆப்தமித்ரா பயிற்சியினர் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.

Tags :