Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த மார்பிள் கல்லால் ஆன சிலுவை பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

900 ஆண்டுகள் பழமை வாய்ந்த மார்பிள் கல்லால் ஆன சிலுவை பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

By: Nagaraj Fri, 10 July 2020 12:00:23 PM

900 ஆண்டுகள் பழமை வாய்ந்த மார்பிள் கல்லால் ஆன சிலுவை பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலுவை... பாகிஸ்தானில் பிரமாண்டமான பழங்கால சிலுவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மார்பிளில் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலையின் எடை 4 டன் ஆகும். ஆசியக் கண்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பிரமாண்ட சிலுவைகளில் இதுவும் ஒன்று.

இந்த சிலுவை கி.பி. 900 - 1200 - ம் ஆண்டை சேர்ந்தது. இந்த காலக்கட்டத்தில், சிரியாவை சேர்ந்த நெஸ்டோரியன் கிறிஸ்தவ மக்கள் பாகிஸ்தானில் அதிகளவில் வாழ்ந்துள்ளனர். இவர்களால் இந்த சிலுவை செதுக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். வடக்கு பாகிஸ்தானில் கங்கை நதிக்கரையை ஒட்டியுள்ள பகுதியில் மார்பிளால் செதுக்கப்பட்டுள்ள சிலுவையை ஸ்கர்டுவிலுள்ள பலுஸிஸ்தான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த ஆராய்ச்சியாளர் வாஜித் பாத்தி கூறுகையில், ''இந்த சிலுவை தோமா கிறிஸ்தவத்தை சேர்ந்த சிலுவை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. தோமா கிறிஸ்தவத்தை பரப்ப வந்த 12 சீடர்களில் ஒருவரான புனித. தாமஸ் காலத்தில் பாகிஸ்தானில் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் தோமானிய கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து இணக்கமாக வாழத் தொடங்கினர். அந்த காலக்கட்டத்தில் இந்த சிலுவை உருவாக்கப்பட்டிருக்கலாம்'' என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

pakistan,great cross,discovery,900 years,oldest ,பாகிஸ்தான், பிரமாண்ட சிலுவை, கண்டெடுப்பு, 900 ஆண்டுகள், பழமையானது

பிரிட்டிஷார் இந்தியா வருவதற்கு முன், வடக்கு பாகிஸ்தானில் கிறிஸ்தவ மக்கள் வசித்தற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ''கில்ஜித் -பல்ஜிஸ்தான் பகுதியில் ‘இமயமலை-காரகோரம் மலைத்தொடர்களில் இதற்கு முன் ஏராளமான சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சிலுவை பாகிஸ்தான் நாட்டு கிறிஸ்தவ மக்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

அவர்களுக்கு சுய அங்கீகாரம் கிடைக்க உதவியாக இருக்கும். நாங்களும் இந்த நாட்டு மக்கள்தான் என்று தேசிய நீரோட்டடத்தில் கிறிஸ்தவ மக்கள் இணைய உறுதுணை புரியும் '' என்று பல்ஜிஸ்தான் பல்கலை துணை வேந்தர் முகமது நயீம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையின மக்கள் ஆவார்கள்.

Tags :