Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரத்தம், எலும்பு புற்றுநோய்களை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

ரத்தம், எலும்பு புற்றுநோய்களை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

By: Nagaraj Sat, 26 Dec 2020 3:39:14 PM

ரத்தம், எலும்பு புற்றுநோய்களை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

மருந்து கண்டுபிடிப்பு...ரத்தம் மற்றும் எலும்பு புற்று நோய்களை குணப்படுத்தும் மருந்தினை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் கிளினிக் மருத்துவ மையத்தில் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்தனர். தற்போது அதற்கு பலனாக ரத்தம் மற்றும் எலும்பு புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

molecules,cancer,vulnerability,drug discovery,physicians ,
மூலக்கூறுகள், புற்றுநோய், பாதிப்பு, மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவர்கள்

ரத்தம் மற்றும் எலும்பு புற்றுநோய்களை எதிர்த்து போராடும் டி.இ.டி.ஐ 76 என்ற செயற்கை மூலக்கூறு ஒன்றை உருவாக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்கை மூலக்கூறு உடலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும் திறன் கொண்டது என்றும், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து சரியாகும் வரை இந்த மூலக்கூறுகள் உடலில் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|