Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எவரெஸ்டை விட மிக உயரமான சிகரங்களை கொண்ட மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிப்பு

எவரெஸ்டை விட மிக உயரமான சிகரங்களை கொண்ட மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிப்பு

By: Nagaraj Mon, 12 June 2023 7:28:10 PM

எவரெஸ்டை விட மிக உயரமான சிகரங்களை கொண்ட மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிப்பு

அண்டார்டிகா: பூமியின் உள்பகுதியில் உள்ள மலைகள்... எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான சிகரங்களைக் கொண்ட மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களைப் பயன்படுத்தி, வல்லுநர்கள் இந்த வியக்கத்தக்க பெரிய மலைகளை, சுமார் 1,800 மைல் ஆழத்தில் கண்டுபிடித்து உள்ளனர்.

underground,seismic,mountains,scientists,discovery ,பூமிக்கு கீழ், நில அதிர்வு, மலைகள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பு

அதி மற்றும் குறைந்த வேக மண்டலங்கள் எனப் பெயரிடப்பட்ட இந்த பிரம்மாண்டமான நிலத்தடி மலைத் தொடர்கள், நில நடுக்கங்கள் மற்றும் அணு வெடிப்புகள் மூலம் போதுமான நில அதிர்வுத் தரவுகளை உருவாக்காததால், இத்தனை ஆண்டுகளாக பார்வையில் இருந்து தப்பிக்க முடிந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இத்தகவல் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags :